Saturday, 25 July 2015

நண்பன் என்றாலே நல்லவன் தான்!!

                     பல நாட்கள் ஓய்வில் இருந்து விட்டு, "என் பெயர் தமிழ்..!!"  வலைப்பதிப்பு மீண்டும் விழித்துக் கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சி..

                "கல்லூரி வாழ்வே வருக!" என்கிற பதிப்பில் குறிப்பிட்டு இருந்தேன் "நண்பர்கள் தான் எனக்கு எல்லாம்" என்று. முற்றிலும் உண்மை. நண்பர்களைக் காணாத, அவர்களில் ஒருவரிடம் கூட பேசாத ஒரு தினம் என் மனதில் அல்லது  நினைவில் நின்றதாக எனக்கு நினைவில்லை (" இதனை இப்பதிப்பிற்காக எழுதுகிறேன்" என்று நீங்கள் நினைத்தால்  அது என் தவறல்ல).

            தலைவர் படமான "தளபதி"யில் ராஜாவின் இசையில் "காட்டுக்குயிலு மனசுக்குள்ள" பாடலின் ருசியே தனி. கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன். பாடலைப் பார்க்கும் சில நேரங்களில் சில இனிய நினைவுகள் விழியைத் தட்டி பார்க்கும்போது கிடைக்கும் உணர்வு இருக்கிறதே அது தனி ரகம். எழுத்துக்களில் விவரிக்கத் திணறுகிறேன் இவ்வரியை எழுதும்போதே. அப்படி ஒரு அதிசய சக்தி உள்ள அப்பாடலில் "பாசம் வைக்க நேசம் வைக்கத் தோழன் உண்டு வாழ வைக்க!என்கிற எட்டு வார்த்தைகள் போதும் என்னைப் போன்ற பலரை ஐந்து நொடிகளில் சிலிர்க்க வைக்க...

             நான்கு  பள்ளிகளில் படித்து இருக்கிறோம் நானும் என் (அண்ணனோ தம்பியோ எப்படி ஆனாலும் எடுத்துக்கொள்ளுங்கள்) சகோதரனும். நண்பர்கள் அதிகம் எங்கள் இருவருக்கும். கல்லூரியில் சேர்ந்த பின் இரு மடங்காகியது அந்த கணக்கு. காரணம் இருவரும் வெவ்வேறு துறை. அது கூட ஒரு வழியில் நல்லதாகி விட்டதே... ஒவ்வொரு விதத்திலும் துணையாய் இருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் என்னால் முடிந்தது இது ...





19.4.2014
                                          "அடே நண்பா"



என்நேரம் வான்பறக்க காரணமென்ன அடே நண்பா 
எந்நேரம் நான்மிதக்கக் காரணமென்ன அடே நண்பா !



நிமிடம் ஒன்று நொடியான காரணமென்ன அடே நண்பா 
சொல் ஒன்று பேச்சான காரணமென்ன அடே நண்பா !!



காற்றின் உருவம் நான்உணர்ந்த காரணமென்ன அடே நண்பா 
கடலின் ஆழம் நான்அளந்த காரணமென்ன அடே நண்பா !



இல்லாத ஒன்றை நான்அறிந்த காரணமென்ன அடே நண்பா 
சொல்லாத ஒன்றை நான்மறந்த காரணமென்ன அடே நண்பா !!



நண்பா நாம்,
செல்வோம் இறுதிவரை அடே  நண்பா -ஒன்றாய் 
வெல்வோம் இறுதிவரை அடே நண்பா !!

                                                               -பிரதாப் குமார்
                                                                      (தமிழ்)

              கருத்து சொல்ல விரும்பி, சொதப்பிய இரு வரிகளை நண்பர்கள் சிலர் கூறிய காரணத்தினால் இதில் இருந்து நீக்கப்படுகிறது.


6 comments:

  1. புது ரகமான பதிப்பு , கவிதை உரைநடை என பதிவிலே புது முயற்சி ! (இதனை இப்பதிப்பிற்காக எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல!! )

    ReplyDelete
  2. Examinations come and go, arrears fly like passing cloud, only FRIENDSHIP stays forever!! Great writing daa. Keep it up. I didn't know you could write poetry so well :) Kudos and cheers!!

    ReplyDelete
    Replies
    1. வாசித்ததே மகிழ்ச்சி டா .. நட்பு என்றும் தொடரும்

      Delete