Saturday, 4 July 2015

கல்லூரி வாழ்வே வருக!

                     என் முதல் பதிப்பினை நேரம் ஒதுக்கி வாசித்து அதனை முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி !!
                       பன்னிரண்டு ஆண்டுகள்-கணக்கில் கொஞ்சம் பெரிதாய்த் தெரிந்தாலும்  "சிரிக்க வைக்கும் நினைவுகளும், சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளும் நிரம்பப் பெற்றது!" என்ற பெருமை, பள்ளிப் பருவத்திற்கு என்றும்  உண்டு. இந்த உண்மை எனக்கு மட்டும் சொந்தம் இல்லை, பள்ளி சென்ற ஒவ்வொருவருக்கும் பொருந்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
                           எனினும், கல்லூரி வாழ்க்கையின் சுகமே தனி. பள்ளி சென்ற நாட்கள் நினைவுகள் தருமென்றால் கல்லூரி காலம் அனுபவங்கள் தரும்ஒன்றல்ல இரண்டல்ல ... பலபல அனுபவங்கள்... விதவிதமாய் ரகம் ரகமாய்!! "உன் வாழ்க்கை உன் கையில்!"- இதன் பொருள் புரியத் தொடங்குவது கல்லூரியில் தான். தன்  செயலைப் பொறுத்து தனக்கேற்ற முடிவுகள் அமையும்!
                    எனக்கு, பள்ளியில் படிக்கும்போதே ( பள்ளியில் நானும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் படிப்பேனே!!) கல்லூரி செல்ல அத்தனை ஆசை. விடுதியில் தங்குவது என் கனவு.நிறைவேறியது என் பதினேழு வயதில்! "நண்பர்கள் தான் எல்லாம்!" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் என்பதில் ஒரு வித பெருமை எப்பொழுதும் என்னுள் ஒளிந்து கொண்டு தான் இருக்கும். அது வெளிப்பட்டால் மகிழ்ச்சியின் எல்லையில் நிற்கின்றேன் என்று அர்த்தம். இதில் சந்தேகத்திற்கு சிறு இடம் கூட இல்லை
                         இந்த பதிப்பில் நான் பகிர்ந்து கொள்ள இருப்பது கல்லூரியில் நான் எழுதிய முதல் கவிதை.எழுதிய இடம், நேரம் கூட நினைவில் இருக்கிறது. இது கூட ஒரு வித சந்தோஷம் தானேஎதிர்பார்த்ததையும் எதிர்பார்ப்பதையும் கண்முன்னே கண்டு ரசிப்பதில் வரம் பெற்றவன் ஆகின்றேன் !!  


29.8.2013
                        "கல்லூரி வாழ்வே வருக!

கனவுகள் தொடங்கிய நாள் முதலே 
நிகழ்வுகள் மலர்ந்தன நாள் முதலே !

வாழ்த்துக்கள் தொடங்கிய நாள் முதலே 
வாசனைப் படர்ந்தது நாள் முதலே !!

தங்கை என்றதும் கொதித்திடும் தோழிகள் 
மச்சான் என்றதும் கலக்கிடும் தோழர்கள் !

யாவும் எந்நாளும் நான் ரசிப்பேன்...!!

மின்வெட்டு நேரம் அதிர்ந்திடும் விடுதி 
நள்ளிரவு கண்விழித்து நடந்திடும் அரட்டை !

யாவும் எப்போதும் நான் ரசிப்பேன் .. !!

கேள்வி கேட்டுத் துரத்திடும் கூட்டமும் 
கேலி செய்து அசத்திடும் கூட்டமும் !

யாவும் என்றென்றும் நான் ரசிப்பேன் ... !!

எதிர்பார்த்துக் காத்திருந்தேன் இந்த வாழ்விற்கு-என்றும் 
எதிர்பார்த்துக் காத்திருப்பேன் இந்த வாழ்விற்கு !
                          -பிரதாப் குமார்
                                                                       (தமிழ்)


4 comments:

  1. சிலுர்க்க வைத்தது உன் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நண்பா நீங்க வாசிச்சாச்சுல அதுவே போதும் . !!!!!!!!!!

      Delete
  2. Kavidha Kavidha... Chancey illa. Uruvaagiraar aduththa Vairamuthu :)

    ReplyDelete
    Replies
    1. தெய்வமே நான் வாழ வேண்டும் . !!

      Delete