Friday, 10 July 2015

இசையும் என் நண்பனே !!

                             என் இரண்டாம் பதிப்பில் குறிப்பிட்டு இருந்தேன்.. " நண்பர்கள் தான் எல்லாம்" என்று! அவர்களுள் ஒன்றாக நான் நினைப்பது இசையை !! உடனே "ராகம்", "சரணம்", "பல்லவி" என்ற வார்த்தைகளை இப்பதிப்பில் அதிகம் காணலாம் என்று நினைத்து விடாதீர்கள். இன்னும் கூட பல்லவி மற்றும் சரணம் ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் அறியாத நல்லவன் நான் . இங்கே குறிப்பிடும் "இசை" என்பது இசை ஞானம் இல்லாத பாமரன் கூட ரசித்து அனுபவிக்கும் "திரைப் பாடல்களை".

                              ஒரு பாட்டு கூட கேட்காத ஒரு நாளை நாளாக மதிக்க மறுக்கும் "பாடல் பைத்தியம்" போன்றவன் என்பதில் ஒரு வித மகிழ்ச்சி தொற்றிக் கொள்வதை வெளிப்படுத்த வார்த்தைகள் தேடுவதில் என் நேரம் முடிகின்றது! இதற்காக அம்மா,அப்பா, அண்ணன் கிட்ட எவ்வளவு பேச்சு . அவ்வளவு திட்டு வாங்கியும் திருந்தவில்லையே !! விடுதியில் என்னுடன் இருக்கும் நண்பர்களுக்குத் தெரியும் என் அறையில் பாடல்களின் சத்தம் இல்லாத நிமிடங்கள் மிகக் குறைவு என்று !
  
                        பள்ளியின் இறுதி ருடம்...வகுப்பறையில்...இத்தனை ஆசையாய் பாடல்கள் கேட்கின்றோமே அதைப் பற்றிச் சில வரிகள்  எழுதி தான் பார்ப்போமே என்று எழுதியது இது. 

13.10.2012
                              “இசை”

எண்ணத்தைச் சீராக்கும் இசையே உன்னை மதிக்கின்றேன்
வண்ணத்தை மிகையாக்கும் இசையே உன்னைத் துதிக்கின்றேன்!

சிந்தனையைச் சிலையாக்கும் இசையே உன்னை வணங்குகின்றேன்
கற்பனையைக் கலையாக்கும் இசையே உன்னை வாழ்த்துகின்றேன்!!

மென்மையை மெய்ப்படுத்தும் இசையே                                                     உன்னைப் போற்றுகின்றேன்
இனிமையை வகைப்படுத்தும் இசையே                                                      உன்னைப் பாராற்றுகின்றேன்!

திசையெட்டும் பரவட்டும் இசையின் புகழ்


பாருக்குத் தெரிந்ததொன்றே- நீ கலையின் மகள்!!


முதலில் வாசித்தது என் அருமை உடன் பிறப்பு பிரதீப் குமார். என் சகோதரன் என்பதால் என்னவோ அடித்தான் நெத்தியடி "நல்லாவே இல்ல டா!!" என்று. ஒரு நிமிட ம் எதுவும் பேசவில்லை. ஓரிரு நாட்கள் சென்றது... அதே இடம் கிட்டத்தட்ட அதே நேரம் நீட்டினேன் இந்த வரிகளை ...


16.10.2012
                            “இசை

இசையில்லா நாளெல்லாம் என்னுள் காயமாகிப் போவதென்ன
இணையில்லா இசையெல்லாம் விண்ணுள் மாயமாகிப் போவதென்ன!

இசையில்லா நாளெல்லாம் யுகங்களாகிப் போனதென்ன
இசையுள்ள நாளெல்லாம் நொடிகளாகிப் போனதென்ன!!

காற்றிலுள்ள ஈரமெல்லாம் இசையாகிப் போகக்கண்டேன் 
வானிலுள்ள மேகமெல்லாம் இசையாகி நகரக்கண்டேன்!

கடலிலுள்ள மீன்களெல்லாம் இசையாகிக் குதிக்கக்கண்டேன்
நிலவிலுள்ள வெளிச்சமெல்லாம் இசையாகிப் பரவக்கண்டேன்!!

எண்ணி எண்ணி ரசிக்கின்றேன்-உன்னைப்பற்றிச்
சொல்லிச் சொல்லி வியக்கின்றேன் !!!
                                                                       
                                                                     -பிரதாப் குமார் 
                                                                               (தமிழ்)
எனக்கு மிகவும் பிடித்ததைப் பற்றி எழுதியதால் தான் என்னவோ, இந்த நாள் வரை நான் எழுதி கவிதைகளுள் எனக்குப் பிடித்த சிலவற்றுள் ஒன்றாய் இருப்பது இக்கவிதை  !!!

4 comments:

  1. இசையில்லா நாளெல்லாம் என்னுள் காயமாகிப் போவதென்ன
    இணையில்லா இசையெல்லாம் விண்ணுள் மாயமாகிப் போவதென்ன!

    =D =D (y)

    ReplyDelete
    Replies
    1. நினைத்ததை எழுதியது மாப்ஸ் கண்டுக்காத டா !!!

      Delete
  2. Wow... Seriously mindboggling. You must consider publishing a compilation of all your poems into a book. If you aren't interested, I would take interest in doing so. Way to go :)

    ReplyDelete
    Replies
    1. நண்பா.. இதுவே போதும் . ஒரு நூறு பேர், நேரம் ஒதுக்கி இப்பதிப்பினை வாசிப்பதே எனக்கு வெற்றி தான்

      Delete