Tuesday, 30 June 2015

தமிழை வைத்துத் துவங்குகிறேன் !!

இணையத்தில்  என் முதல் பதிப்பு .. திருத்தங்கள்குறிப்புகள் ஏதும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் ...!!



நான் ஒன்பதாம்  வகுப்பு  படித்துக் கொண்டிருக்கும் போது கவிதை எழுதத் தொடங்கினேன்அதுவும் பள்ளியில் " காமராஜர் பிறந்தநாள் விழா போட்டிகள்". விளையாட்டாய்  எழுதியதற்கு பரிசு-எதிர்பார்க்கக் கூட இல்லைசின்ன சின்னதாய் எழுதிப் பழகினேன்என் அம்மாதமிழ் ஆசிரியர்கள் திரு இளையராஜாதிரு ஜெய வெங்கடேஷ்என் அண்ணன்கள் சண்முகம்,பிரதீப் ஆகியோர் நான் எழுதும் நடையை வளர்ப்பதற்குத்  துணையாய் இருந்ததில் , இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி !! மேலும் என் நண்பர்கள்  நான் எழுதி முடித்து எழுதியதை வாசிக்கக் காட்டினால் தயங்காமல் நேரம் ஒதுக்கி வாசிப்பார்கள் ... இது போதுமே ஒருவனுக்கு !! 
தொடரும்....



பத்தாம் வகுப்புத்  தொடக்கத்தில்  ஜெய வெங்கடேஷ் ஐயா கொடுத்த தலைப்புகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதியது இது . வகுப்பில் இதனை அவர் வாசித்தது இன்னும் கூட நினைவில் உள்ளது!!

ஜூன் 2010
                                      “தமிழ்”
தனக்கிணையாய் ஓர் உயிரைக் கொள்ளாத உயிர் ;
தன் புகழை  வீழ்த்தும் பகைவன் இல்லாத உயிர் .

இறைவன் கொடுத்த வரமாய் நிற்கும் உயிர்;
இறைவன் கூட பகைக்க முடியாத உயிர்.

முன்னோர்கள் போற்றிய நம் மண்ணின் உயிர்;
மண்ணுள் என்றும் புதைக்க முடியாத உயிர்.

கண்டங்கள் கடந்த கண்ணான நம் உயிர்;
காணாத பிரம்மனாய் த் திகழும் என் உயிர்.

நம்மை வாழ வைக்கும் தமிழ் நம் உயிர்;
எந்நாளும் நான் போற்றும் தமிழ் என் உயிர்.

                                         -பிரதாப் குமார் 
                                                            (தமிழ்)

7 comments:

  1. Thamizhan Endru Solladaa; Thalai Nimirndhu Nilladaa!! Nalla Thodakkam Paadhi Vetri!! Inidhey Thodarattum Un Ezhuthu!! Vaazhga Valamudan :)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நண்பா .. கண்டிப்பாகத் தொடரும் !!!

      Delete
  2. Arumai nanba !!! Vaazhthukal "thamizhuku" !!!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி பூங்குழலி ...தமிழுக்குத் தானே நடக்கட்டும் நடக்கட்டும் !!

      Delete
  3. தம்பிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள் !!! முழங்கட்டும் சங்கொலி !!!! @prathab!!

    ReplyDelete
    Replies
    1. டேய் அண்ணா !!!சங்கா ... முதல் பதிப்பிற்கேவா !!! ha ha he he ho ho

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete